இந்தியா

“செல்வப்பெருந்தகை என்கிட்ட மாட்டிகிட்டாரு” : துரைமுருகன் கலகல பேச்சு!

Published

on

“செல்வப்பெருந்தகை என்கிட்ட மாட்டிகிட்டாரு” : துரைமுருகன் கலகல பேச்சு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2ஆவது நாளாக இன்று (டிசம்பர் 10) காலை தொடங்கியது.

அப்போது அணை கட்டுதல், நீர் நிலைகளை தூர்வாருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை சட்ட மன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.

Advertisement

அப்போது காங்கிரஸ் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவுமான செல்வப்பெருந்தகை, “கடந்த வாரம் பெய்த மழையால் வரதராஜபுரம், முல்லை நகர், தனலட்சுமி நகர், பிடிசி நகர், அஷ்டலட்சுமி நகர் போன்ற இடங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டது.

என்னுடைய தொகுதியில் உள்ள இந்த பகுதிகளில் அரைகுறையாக வேலை நடந்துள்ளது. முன்னதாக மழை வந்தால் 10 நாட்கள் தண்ணீர் நிற்கும் ஆனால் இப்போது உங்களது முயற்சியால் ஒரு நாளில் வடிந்துவிடுகிறது.

இருந்தபோதிலும் நான் குறிப்பிட்ட பகுதியில் முற்றிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க திருப்புகழ் கமிட்டி பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். இதை முதல்வர் நிறைவேற்றுவார் என்று மக்களிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன்.

Advertisement

எல்லா இடத்திலும் இருப்பது போல் என்னுடைய தொகுதியிலும் எனக்கு நெருக்கடி இருக்கிறது. எனவே திருப்புகழ் கமிட்டியை நிறைவேற்றி, நான் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வது என்பது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கையில் தான் இருக்கிறது” என்று கூறினார்.

இதற்கு அவை முன்னவர் துரைமுருகன், “உறுப்பினர் என்கிட்ட நல்லா மாட்டிக்கிட்டாரு. அடுத்தமுறை அவர் எம்.எல்.ஏ-ஆவது என் கையில்தான் இருக்கிறது.

திருப்புகழ் கமிட்டி இல்லை… திருவாசக கமிட்டியாக இருந்தாலும் எனக்குத் தெரியும்.

Advertisement

இதுதொடர்பாக அதிகாரிகளை அழைத்து பேசியிருக்கிறேன். கவலைப்பட வேண்டாம்” என்று பதிலளித்தார்.

அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு திமுக எம்.எல்.ஏ.க்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சடாரென உயர்ந்த தங்கம், வெள்ளி விலை… அதிர்ச்சியில் மக்கள்!

Advertisement

ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version