சினிமா

ஜவான் சாதனையை முறியடிக்க போகும் அட்லீ.. 2000 கோடி வசூலுக்கு அடித்தளம் போட்ட கூட்டணி

Published

on

ஜவான் சாதனையை முறியடிக்க போகும் அட்லீ.. 2000 கோடி வசூலுக்கு அடித்தளம் போட்ட கூட்டணி

கோலிவுட்டில் வெற்றி இயக்குனராக வளம் வந்து கொண்டிருந்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு சென்றார். அவருடைய படம் பெரிய பட்ஜெட் ஆக இருந்தாலும் எதிர்பார்த்ததை விட அதிக வசூலை கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஜவான் படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து அட்லீயின் அடுத்த படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தற்போது தயாரிப்பிலும் இறங்கி உள்ள அட்லீ கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவான் ஆகியோரை வைத்து பேபி ஜான் என்ற படத்தை எடுத்திருக்கிறார்.

Advertisement

இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அட்லீ அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது. அதாவது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் உடன் அட்லீ கூட்டணி போட இருக்கிறார்.

இதில் இன்னும் என்ன சிறப்பு அம்சம் என்றால் கமலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த படம் மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். நடிகர்களின் சம்பளம் இல்லாமல் கிட்டத்தட்ட 450 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்படுகிறது.

அதோடு கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை இப்படம் பெறும் என பேசப்படுகிறது. கிட்டத்தட்ட 2000 கோடி வசூலுக்கு அடிதளம் போட இருக்கிறார் அட்லீ என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

சமீபத்தில் அப்படித்தான் கங்குவா படம் 2000 கோடி வசூல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில் 200 கோடி வசூலுக்கே திணறி வருகிறது. ஆனால் அட்லீ மீது உள்ள நம்பிக்கையால் கண்டிப்பாக படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை கோலிவுட் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை உள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version