இலங்கை
டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி!
டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி!
டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரம் நடைமுறையில் இருக்கும் என்றும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஸ்மாட்ர் சாரதி அனுமதிப்பத்திர நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிற்றல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குவது சிறந்து என்று அரசாங்கம் கண்டறிந்துள்ள நிலையில் டிஜிற்றல் சாரதி அனுமதிப்பத்திரத்தைத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.
உலகில் பலநாடுகள் தற்போது டிஜிற்றல் சாரதி அனுமதிப்பத்திர நடைமுறையையே பின்பற்றி வருகின்றன என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (ச)