இலங்கை

தந்தையுடன் சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்

Published

on

தந்தையுடன் சென்ற மகனுக்கு நேர்ந்த துயரம்

  இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் புத்தளம் – நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது.

Advertisement

உயிரிழந்த இளைஞர் கற்பிட்டி குறிஞ்சிப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
இதன்போது பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக வீழ்ந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நிலையில் பின்னால் வந்த வாகனம் விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

Advertisement

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version