சினிமா
நடிகர்களுடன் காதல்..படவாய்ப்பு பெற்றால் அப்படி பேசுறாங்க!! நடிகை வாணி போஜன் ஓப்பன் டாக்..
நடிகர்களுடன் காதல்..படவாய்ப்பு பெற்றால் அப்படி பேசுறாங்க!! நடிகை வாணி போஜன் ஓப்பன் டாக்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வருபவர்களில் நடிகை வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், கடந்த 2020 -ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.தற்போது வாணி போஜன் சில முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார். செங்கமலம், சட்னி சாம்பார் உள்ளிட்ட ஓடிடி தள படங்களில் வாணி போஜன் நடிப்பில் வெளியாகியது. தற்போது ஆர்யன், கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்தில் நடந்த பெண்கள் வணிக மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்று வாணி போஜன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.அதில், சோசியல் மீடியாகளில் என்னை பற்றி கேலிகளும், வதந்திகளும் வரும்போது எனக்கு அழுத்தம் கொடுக்கவே செய்தன. என் பெற்றோர்களும் வருத்தப்பட்டனர்.ஒரு பெரிய படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி பலரும் என்னிடம் துக்கம் விசாரிப்பதுபோல் விசாரித்தனர்.அந்த படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா? எதற்காக உங்களை நீக்கினார்கள்? என்று கேட்டனர். நடிகைகள் படவாய்ப்புகள் பெற்றால் அதுகுறித்தும் தவறாக பேசுகிறார்கள். நட்பு ரீதியாக ஒரு நடிகருடன் பழகினால் அவரோடு தொடர்பு படத்தி பேசுகிறார்கள்.நான் நடித்த எல்லா ஹீரோக்களுடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். நடிகைகளின் புகைப்படத்தை எடிட் செய்து போடுவதால் நடிகர்களைவிட நடிகைகள்தான் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள்.படவாய்ப்புகள் இல்லை, அதனால் சேலை விளம்பரம் செய்கிறார், பட வாய்ப்பு அதிகமாகிடுச்சி வேறமாதிரி பேசுகிறார்கள் என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.