இலங்கை

பாடசாலை சீருடை துணிகளை பிரதமரிடம் கையளித்தார் சீன தூதுவர்!

Published

on

பாடசாலை சீருடை துணிகளை பிரதமரிடம் கையளித்தார் சீன தூதுவர்!

சீனா இலங்கைக்கு இலவசமாக வழங்குவதாக உறுதியளித்த பாடசாலை சீருடை துணி இன்று (10) உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது. 

 கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின்போது இந்நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. 

Advertisement

பிரதமர் ஹரினி அமரசூரிய, கல்வி அமைச்சின் அதிகாரிகள், சீனத் தூதுவர் சி ஜான் ஹோங் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

 இங்கு உரையாற்றிய சீனத் தூதுவர், இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சுமார் 5.2 பில்லியன் ரூபா பெறுமதியான 11.28 மில்லியன் மீற்றர் துணிகள் பரிசாக வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். 

 இந்த சீருடைகள் 10,096 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், 822 அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கும் வழங்கப்படும். 

Advertisement

 கல்வி அமைச்சினால் 1992 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இந்த சீருடைகள் வழங்கப்பட்டு வருவதுடன் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாடசாலை சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version