சினிமா
பிறந்த தேதியை மாற்றிய நடிகர் ரகுவரன்!! நடிகை ரோஹினி எமோஷ்னல் போஸ்ட்…
பிறந்த தேதியை மாற்றிய நடிகர் ரகுவரன்!! நடிகை ரோஹினி எமோஷ்னல் போஸ்ட்…
தமிழ் சினிமாவில் தன் வில்லத்தனமான குரலால் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ரகுவரன். எந்த கதாபாத்திம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து வந்த ரகுவரன் நடிகை ரோஹினியை திருமணம் செய்து பின் 8 ஆண்டுகள் விவாகரத்து செய்தார்.ஒரு மகன் இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து வாழ்ந்து வந்த ரகுவரன் 2008ல் 49 வயதில் மரணமடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ரகுவரன் பற்றி நடிகை ரோஹினி பல விஷயங்களை பகிர்ந்து வருவார்.அந்தவகையில் எக்ஸ் தள பக்கத்தில் ரகுவரனின் பிறந்தநாளுக்கு ஒரு பதிவினை உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதில், ரகுவரனின் பிறந்தநாள் டிசம்பர் 10 என்று அவரின் அம்மா கூறுவார்.ஆனால் ரகு இல்லை 11 என்று சொல்வார். காரணம் அந்த தேதியில்தான் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் பிற்ந்திருக்கிறார். அதனால் தான் ரகு அந்த தேதியை விரும்பி இருக்கலாம் என்று நினைப்பதாகவும் இந்த இருவருமே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்கள் மிஸ் யூ ரகு என்று பதிவிட்டுள்ளார்.