சினிமா
புஷ்பா 2 உலகளவில் சாதனை..! வெளியாகி 5 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
புஷ்பா 2 உலகளவில் சாதனை..! வெளியாகி 5 நாட்களில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?
புஷ்பா – 1 படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு, இரண்டாம் பாகமானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியிருந்தது. பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்,ராஷ்மிகா,பகத் பாசில் மற்றும் பலர் நடித்துள்ள புஷ்பா – 2 திரைப்படம், உலக அளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் வெளியான ஐந்து நாட்களுக்குள் ₹922 கோடி வசூலித்து, தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் தயாரிப்பாளர் மித்ரி மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, படம் இந்தியா மட்டுமின்றி சர்வதேசத் திரையரங்குகளிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் ‘புஷ்பா – 2’ படத்தின் திரைக்கதை, பரபரப்பான ஒளிப்பதிவு, இசை மற்றும் த்ரில்லர் கதையைப் பாராட்டி வருகின்றனர்.