இந்தியா
மலையாள நடிகர் திலீப் ஐயப்பன் கோயிலில் நெடுநேரமாக சாமிதரிசனம்.. விதி மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை..!
மலையாள நடிகர் திலீப் ஐயப்பன் கோயிலில் நெடுநேரமாக சாமிதரிசனம்.. விதி மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை..!
கடந்த வியாழக்கிழமை சபரி மலை கோயில் நடை அடைக்கும் முன்னதாக நடிகர் திலீப் முன்வரிசையில் நெடுநேரம் நின்று சாமிதரிசனம் செய்தார்.
அரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கும் வரை அவர் அங்கேயே நின்று சாமி தரிசனம் செய்ததாக புகைப்படங்கள் வெளியாகின
இந்த சம்பவம் குறித்து தாமாக விசாரணை நடத்திய கேரள உயர்நீதிமன்றம், திலீப்புக்கு அனுமதி அளித்ததன் மூலம், நீண்ட தூரம் நடந்து வந்த பக்தர்களுக்கு இடையூறாக இருக்காதா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
சில பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க முடியாத சூழலும் ஏற்பட்டதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் விஐபி வரிசையில் சென்ற நடிகர் திலீப் நீண்ட நேரம் சாமி தரிசனம் செய்தது எப்படி என்று அதிகாரிகளிடம் தேவசம்போர்டு விளக்கம் கேட்டுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்க கூடாது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. விதிமீறலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.