சினிமா

வதந்திகளை நம்ப வேண்டாம்! சட்டரீதியாக போராடப் போகிறேன்! ஜானி மாஸ்ட்டர் எச்சரிக்கை!

Published

on

வதந்திகளை நம்ப வேண்டாம்! சட்டரீதியாக போராடப் போகிறேன்! ஜானி மாஸ்ட்டர் எச்சரிக்கை!

பிரபல நடன இயக்குனரும், தெலுங்கு நடனக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான ஜானி மாஸ்டர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாற்றில் கைதாகி பின்னர் வெளியே வந்தார்.இதனால் நடன சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக எழுந்த வதந்திகளை நிராகரித்து தந்து இன்ஸராகிரேம் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். எனது பதவி காலம் இன்னும் முடிவடையவில்லை அதற்க்கு முன்னர் உரிய நடைமுறையின்றி தனது உறுப்பினர் பதவியை ரத்து செய்ய யாருக்கும் உரிமை இல்லை.மேலும் ஆதாரமற்றவை என்றும், தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மற்றும் அவருக்குப் பதிலாக அங்கீகரிக்கப்படாத தேர்தல்களை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக ஊடகங்களில் வதந்திகள் வருகின்றன.எனது பதவிக்காலம் முடிவடையாத நிலையிலும் தேர்தல் நடத்தி சட்டரீதியாக போராடப் போகிறேன். திறமையானவர்களுக்கு வேலை கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது. எனது நடனத்துடன் கூடிய ஒரு நல்ல பாடல் விரைவில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் இருந்து வருகிறது, நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்றார் ஜானி மாஸ்டர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version