இலங்கை

வெளிநாடு செல்லவிருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

Published

on

வெளிநாடு செல்லவிருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்

  புத்தளம் – சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் , வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய தினுக ஷஷேந்திர பெரேரா என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

  விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தாய், தந்தை மற்றும் சகோதரர்கள் இருவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்குச் சென்றநிலையில், இளஞனும் விரவில் அமெரிக்கா செல்லவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை படுகாயமடைந்த பசிந்து தேத்மிக பெர்னாண்டோ என்ற 20 வயதுடைய இளைஞனும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

வட்டக்கல்லிய ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு செயற்படாததால், ரயில் சமிக்ஞை பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் வந்து ஒரு வாரத்திற்கு முன்னர் அதனை சரி செய்துள்ளபோதும், சிவப்பு ஔி சமிக்ஞை மாத்திரம் 24 மணித்தியாலமும் ஔிர்ந்துக் கொண்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விபத்து இடம்பெற்றபோது ரயில் கடவையில் முதியவர் ஒருவர் கடமையில் இருந்ததாகவும், ரயில் வருதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த காரணத்தால் ரயில் கடவையின் இரு பக்கங்களிலும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

  இந்நிலையில் அதனை அவதானிக்காது வந்த மோட்டார் சைக்கிள் ரயில் வீதியில் வந்த வேகத்தில் நுழைந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் பிரேதப் பரிசோதனை இன்று சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னடுக்கபப்ட்டு வருகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version