பொழுதுபோக்கு

4 மாத இடைவெளி: ஓ.டி.டி தளத்தில் வெளியான தங்கலான்; இவ்வளவு தாமதம் ஏன்?

Published

on

4 மாத இடைவெளி: ஓ.டி.டி தளத்தில் வெளியான தங்கலான்; இவ்வளவு தாமதம் ஏன்?

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வரலாற்று பின்னணியில் வெளியான தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியான நிலையில், தற்போது இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நட்சத்திர இயக்குனராக மாறியவர் பா.ரஞ்சித், அட்டக்கத்தி படத்தை இயக்கிய இவர், அடுத்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினிகாந்த் நடிப்பில், கபாலி, காலா, ஆர்யா நடிப்பில் சார்ப்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இவர், அடுத்து விக்ரம் நடிப்பில் தங்கலான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், விக்ரம், பசுபதி, ஆங்கில நடிகர் டேனியல், பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் தயாராகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த வாரம் (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில், சாதனை படைத்து வந்த தங்கலான், மாரி செல்வராஜூவின் வாழை திரைப்படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருப்பதால், தங்கலான் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனாலும் தங்கலான் படம் வசூலில் ரூ100 கோடியை எட்டியுள்ளதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருந்தது.தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளியான 4 வாரத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகிவிடும் நிலை தற்போது இருந்து வந்தாலும், தங்கலான் படம் 4 மாதங்கள் கடந்து தற்போது தான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஒடிடி தளத்தில் வெளியாவதில், உடன்பாடு சிக்கல்கள் காரணமாக இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.நீண்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சிக்கல்கள் தீர்க்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தங்கலான் படம் நெட்ஃபிக்ஸ் இல் வெளியாகியுள்ளது. “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version