வணிகம்

40 வயதில் வங்கி லோன்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்

Published

on

40 வயதில் வங்கி லோன்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் இதுதான்

பெரும்பாலும் வங்கிகள் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கடன் வழங்க பெரிதும் யோசிப்பார்கள். காரணம் அவர்கள் பொருள் ஈட்டும் காலம் குறைவாக இருக்கும் என்பதால். இதனால் திரும்ப கடன் தொகை வசூலிப்பதில் சிரமம் ஏற்படும் என வங்கிகள் நினைப்பதுண்டு. அதனாலே வங்கிகள் இதுபோன்று கடன் பெறுபவர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை விதிக்கின்றனர். அதோடு இவர்களை அதிக ரிஸ்க் கொண்ட கடன் பெறுபவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். மேலும், 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எப்போதும் குறைவான கால அளவு கொண்ட லோன்களையே வங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில், 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் வங்கியில் சுலபமாக கடன் பெற உதவும்  வழிகள் பற்றி பார்ப்போம். கடன் பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு உங்களுக்கு ஒத்துவராத நிபந்தனைகளோடு கடன் பெறுவதற்கு ஒருபோதும் சம்மதிக்காதீர்கள். தேவையான நேரத்தை எடுத்து பல்வேறு கடன் ஆப்ஷன்களை ஆய்வு செய்து, பிறகு தேர்ந்தெடுங்கள். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர், கடன் தொகை மற்றும் வட்டி அடிப்படையில் தேர்வு செய்யுங்கள். எனினும் அதே நேரத்தில் பல கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது உங்களுடைய கிரிடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.அதிக டவுன் பேமெண்ட் தயார் செய்வதன் மூலமாக வயதை பொருட்படுத்தாமல் ஹோம் லோன் பெறுவதற்கான வாய்ப்பை நீங்கள் அதிகரிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு டவுன் பேமெண்ட் தொகையை நீங்கள் செலுத்த தயாராக இருந்தால் வங்கிகள் விரைவாக லோன் கொடுக்க முயற்சிப்பார்கள். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version