விளையாட்டு

IND vs AUS : சீனியர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம்… 2 ஆவது டெஸ்டில் தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி?

Published

on

IND vs AUS : சீனியர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற ஆட்டம்… 2 ஆவது டெஸ்டில் தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது. ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 128 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஆஸ்திரேலியாவை விட 29 ரன்கள் இந்திய அணி பின்தங்கியுள்ளது. இதனால் தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அடிலெய்டில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 42 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் லபுசேன் 64 ரன்களும், தொடக்க வீரர் ஸ்வீனி 39 ரன்களும் எடுத்தனர். ஒரு நாள் போட்டிகளைப் போன்று அதிரடியாக ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 4 சிக்ஸர் 17 பவுண்டரியுடன் 140 ரன்கள் குவித்தார்.

Advertisement

87.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும், கே. எல். ராகுல் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

சுப்மன் கில் 28 ரன்களில் வெளியேற, விராட் கோலி 11 ரன்களும் ரோஹித் சர்மா 6 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 24 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்துள்ள இந்திய அணி 128 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 28 ரன்களும் நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவை விடவும் 29 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி தோல்வியை தவிர்க்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் சீனியர் பேட்ஸ்மேன்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா பொறுப்பற்ற முறையில் விளையாடி வருது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version