இந்தியா

Ragi Puttu : “ஆவி பறக்க சுடச்சுட கேழ்வரகு புட்டு” – 5 மினிட்ஸ் போதும் சட்டுனு செஞ்சரலாம்… டிராய் பண்ணி பாருங்க…

Published

on

Ragi Puttu : “ஆவி பறக்க சுடச்சுட கேழ்வரகு புட்டு” – 5 மினிட்ஸ் போதும் சட்டுனு செஞ்சரலாம்… டிராய் பண்ணி பாருங்க…

கேழ்வரகு புட்டு 

Advertisement

நமது முன்னோர்களின் காலத்தில் சிறுதானியங்கள், ஆரோக்கிய உணவுகள் மட்டுமே அன்றாட வாழ்வில் நிறைந்து இருக்கும். அதன் பின்னர் தற்போது சிறுதானிய உணவுகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த பட்டியலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது கேழ்வரகு. அதாவது செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல், நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்தல் என முக்கியமான உடல்நல பாதிப்புகளை உண்டு செய்யும் நோய்களைக் கட்டுக்குள் வைக்கவும், வராமல் தடுக்கவும் உதவுகிறது. கேழ்வரகில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. கேழ்வரகில் களி, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு இட்லி, போன்ற பல்வேறு வகை வகையான உணவுகளை தயாரித்து ருசித்து வருகிறோம். எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக கேழ்வரகு புட்டு இருக்கிறது. அதனை எளிமையாக செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

கேழ்வரகு- 100 கிராம், பெரிய வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, எலுமிச்சைச் சாறு, கடுகு 1 தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு 2 தேக்கரண்டி, எண்ணெய், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லித் தழை சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும்.

கேழ்வரகு மாவில் சிறிது உப்பு கலந்த நீரைத் தெளித்து சற்று ஈரமாகப் பிசறி ஆவியில் வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, அத்துடன் கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்தால் சுவையான கேழ்வரகு புட்டு தயார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version