சினிமா

அடித்து நொறுக்கும் புஷ்பா 2.. ஆறு நாட்களில் செய்த கலெக்ஷன்

Published

on

அடித்து நொறுக்கும் புஷ்பா 2.. ஆறு நாட்களில் செய்த கலெக்ஷன்

நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் தியேட்டரில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இப்படம் அமைந்து இருக்கிறது.

முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவியது. அதை சிறப்பாக பூர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் சுகுமார். முதல் பாகத்தில் சமந்தா குத்தாட்டம் போட்டிருந்தார்.

Advertisement

அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புஷ்பா 2 படத்திலும் இரண்டு ஐட்டம் பாடல்கள் ரசிகர்களை குதூகலமாக்கியது. புஷ்பா 2 படம் வெளியாகி ஐந்து நாட்களில் 922 கோடி வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.

இந்த சூழலில் ஆறாவது நாள் முடிவில் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலை புஷ்பா 2 படம் எட்டி இருக்கிறது. இப்படம் வெளியான ஒரு வாரத்திற்கு உள்ளாகவே ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து இருப்பது பலரையும் வாயை பிளக்கச் செய்திருக்கிறது.

இதுதவிர ஏற்கனவே புஷ்பா 2 படம் ஓடிடிக்கு விற்கப்பட்டிருந்தது. அந்தத் தொகை மட்டும் கிட்டத்தட்ட 275 கோடி ஆகும். டிஜிட்டல் மற்றும் மியூசிக் ஆகியவை கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகி இருக்கிறது.

Advertisement

புஷ்பா 2 படம் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இப்போது மிகப்பெரிய லாபத்தை எட்டி இருக்கிறது. இன்னும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் அசால்டாக 2000 கோடி அடித்து விடும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version