இலங்கை
அமெரிக்காவிடம் முன்வைத்த நிதிக் கோரிக்கையை மீளப்பெற்ற அதானி குழுமம்!
அமெரிக்காவிடம் முன்வைத்த நிதிக் கோரிக்கையை மீளப்பெற்ற அதானி குழுமம்!
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது.
அதானி குழுமத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்கு, அந்த குழுமத்தின் கோரிக்கைக்கு அமைய 553 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
இந்தநிலையில், அந்தக் கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது. கொழும்பு மேற்கு முனையத் திட்டத்துக்காக உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிக்கப்படும் என்று அதானி குழுமம் அறிவித்துள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக லஞ்ச குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில் அமெரிக்காவிடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை இந்தியாவின் அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது.