இந்தியா
இரட்டை இலை சின்னம் வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
இரட்டை இலை சின்னம் வழக்கு: இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
ஈபிஎஸ், ஓபிஎஸ்
உட்கட்சி விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சூர்யமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை உடனடியாக விசாரணைக்கு எடுக்கக்கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 4-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனுதாரர் சூர்யமூர்த்தி என 4 பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், எழுத்துப்பூர்வ விளக்கங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், நோட்டீஸ் அனுப்பிய 4 பேர் தரப்பிலும் வரும் 23-ஆம் தேதி டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.