சினிமா

இளையராஜாவின் பயோபிக் திடீரென கைவிடப்பட்டதா..? அசால்ட்டாக விலகிய கமல்.! தனுஷின் நிலை என்ன?

Published

on

இளையராஜாவின் பயோபிக் திடீரென கைவிடப்பட்டதா..? அசால்ட்டாக விலகிய கமல்.! தனுஷின் நிலை என்ன?

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த  இசையமைப்பாளராக இளையராஜா திகழ்ந்து வருகின்றார். இவருடைய  பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே தகவல்கள் வெளியாகின. ஆனாலும் இளையராஜாவின் பயோபிக் உருவாகுவதில் புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது.இளையராஜாவின் பயோபிக் படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாகவும், இதன் திரைக்கதையை அமைக்கும் பொறுப்பை கமலஹாசனும் ஏற்றிருந்தார். அது மட்டுமில்லாமல் இளையராஜாவின் சாயலில் தனுஷ் வெளியிட்ட புகைப்படங்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி இருந்தது.d_i_aநடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை, குபேரா ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். ஆகவே இந்த படங்களின் ஷுட்டிங் முடிந்த பிறகு இளையராஜாவின் பயோபிக் படத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் திடீரென இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து கமலஹாசன் விலகி இருந்தார். இதைத்தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் படம் தொடர்பில் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்த நிலையில், இளையராஜாவின் பயோபிக் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக கைவிடப்படுவதாகவும், பட்ஜெட் அதிகரித்த காரணத்தில் கைவிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்கள் வாய் திறந்தால் தான் உண்மை என்னவென்று தெரியும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version