இந்தியா

இவ்வளவு வெரைட்டியா ? மதுரையிலிருந்து கேரளா பறக்கும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்…!!

Published

on

இவ்வளவு வெரைட்டியா ? மதுரையிலிருந்து கேரளா பறக்கும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள்…!!

கிறிஸ்மஸ் பொம்மைகள்

Advertisement

டிசம்பர் மாதத்தில் வரக்கூடிய கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் அனைவருமே தங்களுடைய வீடுகள் மற்றும் தேவாலயங்களில் குடில் அமைத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவார்கள். குடில் அமைப்பதற்கு என்று கலர் கலரான குடில் பொம்மைகளை ஒவ்வொரு ஆண்டும் வாங்குவது என்பதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

இந்த நிலையில் கைவினைக் கலைஞர்களின் கூடாரமாக விளங்கக்கூடிய மதுரை விளாச்சேரி கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் விழா காலங்களுக்கு ஏற்ப கொழு பொம்மைகள் முதற்கொண்டு விநாயகர், கிருஷ்ணன் போன்ற குடில் பொம்மைகள் வரை இங்கு சீசனுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு வரும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணியில் பொம்மை தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், காகித கூழ், சுண்ணாம்பு, சிமெண்ட் ஆகியவற்றை கொண்டு மோல்ட் மூலம் பொம்மைகளை செய்து, பின்பு பொம்மைகளில் உள்ள சிறு துளைகளை அடைத்து நீரினுள் மூழ்கி உலர வைத்த பின்பு கிக்கோ கார் பெயிண்ட் மூலம் பொம்மைகளுக்கு கலர் கலரான வண்ணங்களை தீட்டுகின்றார்கள்.

Advertisement

ஒரு இன்ச் முதல் 10 அடி வரை என 18 செட்டுகளைக் கொண்டு குடில்களை செய்யப்படுகின்றது.ஒவ்வொரு செட்டுகளிலும் ஜீசஸ், மாதா, சூசையப்பர்,மூன்று ராஜாக்கள்,ஆடு மேய்ப்பவர்கள், ஒட்டகம்,மாடு என 18 பொம்மைகள் இருக்கின்றது. ஒரு இன்ச் முதற்கொண்டு 2 அடி வரை காகிதம் கூலினாலும் மூன்றிலிருந்து பத்து அடி உள்ள பொம்மைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மூலமாகவும் தயார் செய்கின்றார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதினால் பொம்மைகள் அனைத்தையும் நாகர்கோவில், எர்ணாகுளம்,கேரளா, வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு அனுப்ப தயார் செய்து தற்பொழுது அதனை பேக் செய்யும் பணிகள் ஆனது நடைபெற்று வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version