சினிமா

ஒரே நாளில் பல மில்லியனா..? சியான் விக்ரம் காட்டிய அதிரடி சாதனை…!

Published

on

ஒரே நாளில் பல மில்லியனா..? சியான் விக்ரம் காட்டிய அதிரடி சாதனை…!

முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தீர சூரன் – பார்ட் 2 ‘எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்திற்கு பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் முதலில் பாகம் 2 வெளியாகிறது. பின்னரே பாகம் ஒன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வீர தீர சூரன்  பார்ட் 2 வெளியாக இருக்கிறது. “d_i_aஇந்நிலையில் ‘வீர தீர சூரன்  பார்ட் 2 ‘ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன. ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.வெளியாகிய நேரம் முதல் தற்போது வரையில் ‘வீர தீர சூரன் பார்ட் 2 டீசர்’  10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. சீயான் விக்ரம் ரசிகர்களும் இதனை பலமாக ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளமைக்கு நன்றி கூறி திரைபடக்குழு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது. அதில் சீயான் விக்ரமின் அபாரமான நடிப்பை காட்டும் வகையில் டீசரில் உள்ள கிளிப்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version