இந்தியா

கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் தொலைந்து விடாதா ? புயலில் எப்படி பறக்கும்?

Published

on

கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பறவைகள் தொலைந்து விடாதா ? புயலில் எப்படி பறக்கும்?

வலசை செல்லும் பறவைகள் எப்படி இளைப்பாறும் தெரியுமா ?

Advertisement

வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் பறவைகள் வலசை போகுவது என்பது இயல்பு. இந்த மழை காலங்களில் சில பறவைகள் தாங்கள் வசிக்கின்ற நாடுகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து சென்று உணவுகளை தேடுகின்றன. பல பறவைகள் கண்டம் விட்டு கண்டம் இடம் பெயர்ந்து உணவுகளை தேடி செல்கின்றன. இதற்கு வலசை போகுதல் என்று பெயர்.

இதுகுறித்து பறவை ஆராய்ச்சியாளர் மதிவாணன் கூறுகையில், “இந்தியாவில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.நகரம் முழுவதும் பணி மூடியபடி இருக்கும். ஏரிகளில் இருக்கிற தண்ணீர் எல்லாம் பனியாக உறைந்து போய் இருக்கும். இதன் காரணமாகஅங்குள்ளபறவைகள் உணவுக்காக வெப்பமண்டல நாடுகளுக்குஇடம்பெயர்கின்றன. அதன்படி இந்தியாவுக்கும் வெளிநாட்டு பறவைகள் ஏராளமானவை வருகின்றன. இந்தியாவில் மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்.

இதன் காரணமாக பூச்சி, புழுக்கள் அதிகளவில் இங்கு இருக்கும். இதனை சாப்பிடுவதற்காகவே உள்நாட்டு பறவைகள் வெளிநாட்டு பறவைகள் ஒன்று கூடுகின்றன. மழைக்காலங்களில் பறவைகள் வலசை செல்வதற்கு இதுவே முதன்மையான காரணம்.வலசை செல்வதற்கு முன்பு அதாவது குளிர்காலங்களில் பறவைகள் நிறைய உணவுகளை சாப்பிட்டு உடம்பில் கொழுப்புச்சத்தை அதிகரித்து கொள்ளும். அப்பொழுதுதான் நாடு விட்டு நாடு வலசை செல்லும் பொழுது பறவைகளால் பறக்கமுடிகிறது.

Advertisement

குறிப்பாக வலசை செல்லும் பொழுது பறவைகள் தொலைந்து விடாது, ஏனென்றால் அவைகளுக்கு மரபிலேயே சரியாக செல்ல வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். ஒருவேளை தொலைந்தாலும் மீண்டும் அவைகள் சந்தித்து விடுகின்றன எனக் கூறப்படுகிறது. அதைபோல் புயல் காலங்களில் பறவைகள் ஒரு யுத்தியை கையாள்வதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஆராய வேண்டும். அவையாவது புயல் மையம் கொண்டிருக்கும் இடத்தினை நோக்கி பறவைகள் சென்று விடுமாம். அப்பொழுது அங்குகாற்றின் வேகம் குறைவாக இருக்கும் என சொல்கிறார்கள்.குறிப்பாக வரிதலை வாத்து உள்ளிட்டவை உலகத்திலேயே மிக நீண்ட தூரம் வலசை செல்கின்றன.

ஐரோப்பா கண்டனங்களில் இருந்து இந்தியா வரை வெளிநாட்டு பறவைகள் வருவதை உறுதி செய்துள்ளோம். இந்த அளவிற்கு அவைகள் வருவதற்கு முக்கிய காரணம் உணவுக்காக மட்டுமே இனப்பெருக்கம் செய்யாது. இறைத்தேடி வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்யும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. வலசை வருகின்ற வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி முட்டை இட்டு குஞ்சு பொறிக்காது. சில மாதங்கள் தங்கி விட்டு மீண்டும் தங்களது நாடுகளுக்கு திரும்பி செல்கின்றன. அங்கு சென்று தான்இனப்பெருக்கம் செய்கின்றன. உள்ளூர் பறவைகள் மட்டுமே வலசை செல்லும் பொழுது இனப்பெருக்கம் செய்கின்றன.

Advertisement

குறிப்பாக கூழைக்கடா பறவையை கூறலாம். இதுபோன்ற பறவைகளை எல்லாம் வெளிநாட்டு பறவைகள் தான் என சிலர் நினைக்கின்றன. அது முற்றிலும் தவறு. செங்கால் நாரை உள்ளிட்டவை மட்டுமே வெளிநாட்டு பறவைகள் ஆகும். எது உள்நாட்டு பறவை எது வெளிநாட்டு பறவை என அடையாளம் தெரிந்து கொள்ள மொபைல் செயலிகள் உள்ளன. அவற்றை டவுன்லோட் செய்துமுதலில் பறவைகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். வலசை வருகின்ற பறவைகளை சிலர் வேட்டையாடுகின்றனர். அதுமிகவும் தவறான செயல்.

ஏனென்றால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வருகின்ற பறவைகளை வேட்டையாடினால் அதன் எண்ணிக்கை குறையும். குறிப்பாக பறவைகள் எண்ணிக்கை குறைந்தால் ஆபத்து தான். ஏனெனில் பூச்சி புழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவைகளால் விவசாயம்உள்ளிட்டவை பாதிக்கப்படும். எனவே பறவைகள் எப்பொழுதும் மனிதர்களுக்கு நன்மையை அளிக்கின்றன.அவற்றை நாமும் அன்போடு பார்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version