இந்தியா

காலையில் கடற்கரைக்கு வந்த ராட்ஜசன்… திரண்டு நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்…

Published

on

காலையில் கடற்கரைக்கு வந்த ராட்ஜசன்… திரண்டு நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்…

20 அடி நீளமுடைய பனை திமிங்கிலமானது கரை ஒதுங்கியது

Advertisement

பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் கடல் சீற்றத்தினால் 20 அடி நீளமுடைய பனை திமிங்கலமானது கரை ஒதுங்கியது. வனத்துறையினர் மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு கடற்கரை ஓரத்தில் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் கடல் பசு, டால்பின், ஆமை, கடல் அட்டை, கடல் குதிரை போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதனை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள், மீனவர்கள், ஆராய்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தினை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவருகிறது. இன்று (டிசம்பர்.11)காலை பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் 20 அடி நீளமுடைய பிரிதேஸ் திமிங்கலம் என்கிற பனை திமிங்கலமானது கரை ஒதுங்கி கிடந்தது. இதனை பார்த்த மீனவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisement

வனத்துறை அதிகாரிகள் திமிங்கிலத்தினை கடலில் இருந்து மீட்டு உடற்கூறாய்வு மேற்கொண்டு கடற்கரை ஓரத்தில் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20 அடி உடைய திமிங்கிலம் என்பதால் மீனவர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version