இந்தியா
குடியரசுத் துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? – இந்தியா கூட்டணி திட்டம் என்ன?
குடியரசுத் துணைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்? – இந்தியா கூட்டணி திட்டம் என்ன?
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் பெரும்பாலான நாட்கள் முடங்கின.
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கட்சி ரீதியாக பாரபட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது குறுக்கிடுவதாகவும் கூறி அவர் மீது இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீர்மானத்தில் காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சிகளைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.