இலங்கை

க்ளப் வசந்த கொலை ; சந்தேகநபர்களுக்கு பிணை!

Published

on

க்ளப் வசந்த கொலை ; சந்தேகநபர்களுக்கு பிணை!

க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களையும் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு ஹோமாகமை மேல்நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷடீன் அனுமதி வழங்கியுள்ளார். 
 
இதன்படி, 8 சந்தேகநபர்களும் தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பிணை மற்றும் 2 சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 
 
அத்துடன் சந்தேகநபர்களின் கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
 
கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் திறப்பு விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்தனர். 
 
இதற்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 8 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version