தொழில்நுட்பம்
சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
சுவற்றில் பொருத்தப்படும் ஹீட்டர்கள் பார்ப்பதற்கு ஏசிகளைப் போலவே தோற்றமளிக்கின்றன. ஆனால் வெப்பமான காற்றை வழங்குகின்றன. பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமேசான் உள்ளிட்ட இந்திய சந்தைகள், ஃபேன் ஹீட்டர்கள், எண்ணெய் நிரப்பப்பட்ட ரேடியேட்டர்கள் மற்றும் ஹாலோஜென் ஹீட்டர்கள் போன்ற பல்வேறு ஹீட்டர்களை வழங்குகின்றன. ஆனால் சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களானது இன்றைய காலக்கட்டத்தில் ஆடம்பர தேவைகளில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது. இவை தோற்றத்தில் மிகவும் ஸ்டைலானவை மற்றும் எந்த சுவரிலும் இதை எளிதாக பொருத்திக் கொள்ளலாம் என்பதால் இடத்தை சேமிக்கிறது. இந்த ஹீட்டர்களானது குறிப்பிட்ட இடத்தை மட்டுமல்ல, முழு அறையையும் சூடாக்கும். டைமர்கள், தெர்மோஸ்டாட்கள் மற்றும் சைல்டு-லாக் போன்ற மேம்பட்ட அம்சங்கள் பாதுகாப்பை வழங்குகின்றன. குறிப்பாக மலைப்பிரதேசங்களுக்கு மிகவும் பொருத்தமானவை. எனவே, இவை கடுமையான குளிர்காலத்திற்கு வசதியாக இருக்கும்.
இதன் நேர்த்தியான வடிவமைப்பு உட்புற அழகை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் அட்வான்ஸ்ட் ஹீட்டிங் டெக்னாலஜியானது வெப்பமான காற்றை வழங்குவதால், இது நவீன வீடுகளுக்கு ஏற்றது. இந்த ஹீட்டர்கள் ஆற்றல், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதியை வழங்குகின்றன. எனவே, அவை குளிர்காலத்திற்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.
இந்த சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களானது வெப்பமான காற்றை வழங்குகின்றன மற்றும் குளிர்ந்த காலம் முழுவதும் வசதியான சூழலை உருவாக்குகின்றன.
இந்த ஹீட்டர்கள் இண்டுஇடிவ் (intuitive) கன்ட்ரோல் பேனல்களுடன் வருவதால், டெம்ப்ரேசரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் விரும்பிய வெப்பநிலையை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பதால், குளிர் காலத்தில் சௌகரியத்தை வழங்கி, ஆற்றல் சேமிப்பை மேம்படுத்துகிறது.
இன்புல்ட் டைமர் அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட நேரங்களில் ஹீட்டரை ஆன் மற்றும் ஆஃப் செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே அமைக்கலாம்.
இந்த ஹீட்டர்கள் அமைதியாக செயல்பட்டு வெப்பத்தை வழங்குவதால், அவை பெட் ரூம், லிவ்விங் ரூம் மற்றும் அலுவலகம் போன்ற இடங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.
இந்த ஹீட்டர்களில் பொதுவாக டஃப்னட் கிளாஸ் பயன்படுத்தப்படுகிறது. இது ஸ்டைலான தோற்றத்தை வழங்குவது மட்டுமல்லாமல் நீடித்த தன்மையைக் கொண்டது. எனவே, இது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஹீட்டர்கள் சுவரில் பொருத்தப்பட்டிருப்பதால், அவை இடத்தை சேமிக்கிறது மற்றும் சிறிய இடத்திற்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.
சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களானது, கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட வீடுகளுக்கு ஏற்றவையாகும். ஏனெனில் இவை பாதுகாப்பான மற்றும் சைல்ட் லாக் டெக்னாலஜி போன்ற அம்சங்களை வழங்குகிறது.
சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்கள், சைல்ட் லாக், ஓவர் ஹீட்டிங் ப்ரொடெக்ஷன் மற்றும் கூல்-டச் எக்ஸ்டீரியர் போன்ற அம்சங்களை வழங்குகின்றன.
இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் இருப்பவர்களுக்கு இந்த ஹீட்டர்கள் ஏற்றவை. சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களானது, ஆண்டு முழுவதும் தேவையான வெப்பத்தையும், வசதியையும் உறுதி செய்கின்றன.
இந்த ஹீட்டரை ரிமோட் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். நீங்கள் எழுந்து ஹீட்டருக்கு செல்ல தேவையில்லை. இதில் பாதுகாப்பு அம்சமும் உள்ளது. ஹீட்டர் மிகவும் சூடாக இருந்தால், அது தானாகவே அணைக்கப்படும்.
சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்களை சுத்தம் செய்வது சிரமமாக இருக்கும். ஏனெனில், சிக்கலான பகுதிகளை சுத்தம் செய்வதற்கும் சில மணி நேரம் எடுத்துக் கொள்ளும் மற்றும் சில கருவிகள் தேவைப்படலாம்.
இந்த ஹீட்டர்களின் விலை ஒரு பெரிய குறைபாடாக இருக்கிறது. அதன் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பு காரணமாக சுவரில் பொருத்தப்படும் ஹீட்டர்கள் விலை அதிகமாக உள்ளது.