சினிமா
டிசம்பர் 13 தியேட்டரில் வெளியாகும் 4 படங்கள்.. சூது கவ்வும் பார்ட் 2 வெல்லுமா.?
டிசம்பர் 13 தியேட்டரில் வெளியாகும் 4 படங்கள்.. சூது கவ்வும் பார்ட் 2 வெல்லுமா.?
இந்த டிசம்பர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டாவது வாரத்தில் கிட்டத்தட்ட நான்கு படங்கள் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகிறது. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
சித்தார்த் நடிப்பில் உருவான மிஸ் யூ படம் முன்பே வெளியாக இருந்தது. அப்போது புயல் காரணமாக படத்தின் ரிலீஸை தயாரிப்பாளர் தள்ளி வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி தியேட்டரில் இப்படம் வெளியாகிறது.
மிஸ் யூ படத்தை என் ராஜசேகர் இயக்கியுள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அடுத்ததாக இதே நாளில் ராஜா கிளி என்ற படம் வெளியாக இருக்கிறது. தம்பி ராமையாவின் மகன் உமாபதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.
இதில் சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா நடித்துள்ளனர். மிகவும் நகைச்சுவையாக இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் 2k லவ் ஸ்டோரி படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஜெகவீர், மீனாட்சி, பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ள நிலையில் ரொமான்ஸ் ஜானரில் இந்த படம் உருவாகி இருக்கிறது. அடுத்ததாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் தான் சூது கவ்வும் 2.
நரேன் குமாரசாமி இயக்கத்தில் 2013 வெளியான படம் தான் சூது கவ்வும். விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய பெயரை இந்த படம் வாங்கி கொடுத்த நிலையில் இப்போது பார்ட் 2 படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார்.
இதில் மிர்ச்சி சிவா, ராதாரவி, யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், கருணாகரன் போன்றோர் நடித்துள்ளனர். முதல் பாகம் அளவுக்கு இரண்டாவது பாகம் வெற்றி பெறுகிறதா? என்பது வருகின்ற டிசம்பர் 13 இல் தெரிய வரும்.