உலகம்

டொங்கா பிரதமர் பதவி விலகல்!

Published

on

டொங்கா பிரதமர் பதவி விலகல்!

தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு நாடான டொங்கா இராச்சியத்தின் பிரதமர் சியாவொஸி சொவாலேனி நேற்று காலை பதவி விலகியுள்ளார்.

பிரதமர் சொவாலேனி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த நவம்பர் 23ஆம் திகதி அந்நாட்டு சட்டப்பேரவையின் சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டது. அப்பிரேரணை நேற்று நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொவாலேனி தாமாக முன்வந்து தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

Advertisement

இது குறித்து பிரதமர் சியாவொஸி சொவாலேனி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தனது பதவியை இராஜினாமா செய்வதாகக்கூறி தனது பாராளுமன்ற உரையை முடித்துக்கொண்டார். பதவி விலகலுக்கான காரணம் குறித்தும் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்தும் இன்னும் தெரிவிக்கப்படாத நிலையில், அந்நாட்டு மன்னர் டுபோவிற்கும் பிரதமர் சொவாலேனியின் அரசிற்கும் இடையே கடினப்போக்கு நிலவியதாகக் கூறப்படுகிறது.

இன்னும் சில மாதங்களில் டோங்கா நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version