சினிமா
தனுஷ் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!ஆர்வத்தில் ரசிகர்கள்
தனுஷ் வெளியிட்ட புதிய அறிவிப்பு..!ஆர்வத்தில் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான திரைப்படம் தான்‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அண்மையில் இப்படத்தின் “கோல்டன் ஸ்ரோவ்”,”காதல் தோல்வி “ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பினை பெற்றிருந்தது.இந்நிலையில் இத்திரைப்படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.அதாவது இப்படமானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதுடன் மேலும், இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை, முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட்ஸ் மூவீஸ் வாங்கியுள்ளதாக தனுஷ் அவர்கள் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இவரது குறித்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமாக தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.