உலகம்
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பெண்கள்!
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பெண்கள்!
நைஜீரியாவில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் பிள்ளைகள் கடத்தப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய தரப்பினர் கடத்தலை மேற்கொண்டுள்ளனர்.
நைஜீரியாவின் Zamfara மாநிலத்தின் காபின் தாவா கிராமத்தில் வீடு வீடாகச் சென்று துப்பாக்கி முனையில் மக்களை நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு 50 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கிராமத்திலுள்ள மக்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நைஜீரிய பொலிசார் தெரிவித்துள்ளனர். கப்பம் கோரும் நோக்கில் இவ்வாறான கடத்தல்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை கடந்த மார்ச் மாதமும் அந்நாட்டின் வடமேற்கு பகுதியிலுள்ள குரிகா கிராமத்தில் 130 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.