சினிமா

நிம்மதியை தொலைத்த சூர்யா.. தோல்வியில் இருந்து மீண்டு வர எடுத்த முடிவு

Published

on

நிம்மதியை தொலைத்த சூர்யா.. தோல்வியில் இருந்து மீண்டு வர எடுத்த முடிவு

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. ஜெய் பீம் படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த நிலையில் அதன் பிறகு கங்குவா படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் காலை வாரிவிட்டது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். அது தவிர சூர்யாவின் 45 வது படத்தை இயக்குகிறார்.

Advertisement

படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் நிம்மதியை இழந்த படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருந்து வருகிறாராம். மேலும் இதிலிருந்து மீண்டு வருவதற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார்.

அதாவது பாலிவுட்டில் சல்மான் கான் தொடர் தோல்வி கொடுத்த போது அவருக்கு ஒரு ஆலோசகர் தேவைப்பட்டார். அவர் வந்த பிறகு தான் மீண்டும் தனது கேரியரில் சல்மான்கான் ஏறுமுகத்தை சந்திக்க ஆரம்பித்தார்.

இப்போது அவரை சூர்யா தனது ஆலோசகராக நியமித்திருக்கிறாராம். இனி அவர் நடிக்கும் படம் மற்றும் பட்ஜெட் என அனைத்தையுமே இவர்தான் பார்த்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

ஆகையால் இனி சூர்யாவின் படங்கள் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடும்படி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு ஆர் ஜே பாலாஜி மற்றும் சூர்யா கூட்டணி எப்படி அமைகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version