சினிமா

புஷ்பா-2 இடிபோல இருக்கு..! புஷ்பா குறித்து பிரபல நடிகர் போட்ட அந்த பதிவு…!

Published

on

புஷ்பா-2 இடிபோல இருக்கு..! புஷ்பா குறித்து பிரபல நடிகர் போட்ட அந்த பதிவு…!

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2: தி ரூல்’. இது டிசம்பர் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில்  வெளியானது. இந்தப் படத்தின் முதல் பாகம் 2021ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்குப் பெரும் வரவேற்பு இருந்தது.இந்நிலையில் தற்போது புஷ்பா-2 வெளியாகி 6 நாட்களில் 1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரசிகர்களிடமிருந்தும்   கலவையான விமர்சனம் வந்த போதிலும் படம் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் புஷ்பா பாகம் 1ல் இருந்தது போலவே பாகம்-2ல் கிலேமர் பாடல் இருந்தது. சமந்தா நடனம் ஆடி ரசிகர்களை இழுத்தது போல பாகம் இரண்டுக்கு ஸ்ரீ லீலா ஒரு பாடலுக்கு ஆடி வலு சேர்த்துள்ளார். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் அணைவரின் நடிப்பும் அபாரமாக இருந்தது. படத்தினை பார்த்த பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் நடிகர் டகுபடி வெங்கடேஷ்  புஷ்பா திரைப்படம் குறித்து தனது இன்ஸராகிறேம் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில் “இடிபோல உள்ளது அல்லு அர்ஜுனின் நடிப்பு, திரையில் இருந்து என் கண்களை எடுக்க முடியவில்லை.நாடு முழுவதும் திரைப்படத்தை அனைவரும் கொண்டாடுவதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சி, ராஷ்மிக்கா மந்தனா அபாரமாக நடித்திருக்கிறார். இயக்குனர் சுகுமார் உட்பட அனைவருக்கும் புஷ்பா 2 வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.  இதனை ராஷமிக்கா மந்தனா தனது ஸ்டோரியில் போட்டுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version