இலங்கை

பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புனர்வு; இருவர் கைது

Published

on

பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புனர்வு; இருவர் கைது

  இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியிலுள்ள பெண் ஒருவர் இறப்பர் தோட்டத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்திய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மேலும் சிலருடன் இணைந்து கடந்த 9 ஆம் திகதி இந்த கூட்டு பாலியல் வன்புனர்வை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த 39 வயதான குறித்த பெண்ணை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைதான இருவரும் 21 மற்றும் 31 வயது மதிக்கதக்கவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கிரியெல்ல பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version