இந்தியா

பைக் டாக்ஸிகளுக்கு சிக்கல்… போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!

Published

on

பைக் டாக்ஸிகளுக்கு சிக்கல்… போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் பைக் டாக்ஸி சேவையை வழங்கி வருகின்றன.

கார், ஆட்டோ சேவையை ஒப்பிடும் போது பைக் டாக்ஸியில் கட்டணம் குறைவு என்பதால், பலரும் பைக் டாக்ஸி புக் செய்து பயணம் செய்து வருகின்றனர்.

Advertisement

இந்தநிலையில், பைக் டாக்ஸிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஆடிஓ-க்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நேற்று (டிசம்பர் 10) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது தமிழகத்தில் வணிக நோக்கத்திற்காக இயக்கப்படும் பைக் டாக்ஸிகள், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாக மனு அளித்தனர்.

Advertisement

மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி பைக் டாக்ஸிகள் இயக்கப்படுகிறதா என்பதை சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

அதன்படி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பைக் டாக்ஸிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைளை மண்டலம் வாரியாக ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்குள் அனுப்ப வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு: இரு அவையிலும் அமளி!

Advertisement

டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் கேரளா பயணம் முதல் 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் வரை!

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version