இலங்கை
மின்கட்டணத் திருத்தங்கள்: ஜனவரியில் இறுதி முடிவு!
மின்கட்டணத் திருத்தங்கள்: ஜனவரியில் இறுதி முடிவு!
மின்கட்டணத் திருத்தம் தொடர்பில், இலங்கை மின்சாரசபை முன்வைத்த பரிந்துரைகள் மீளாய்வு செய்யப்படுவதுடன், மின்கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில் உள்ளதாவது:
மின்கட்டணத் திருத்தம் குறித்து இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள பரிந்துரைகளை முழுமையாக பரிசீலனை செய்து வருகின்றோம். மின்னுற்பத்தி தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தரவுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம். மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் துறைசார் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் அபிலாசைகள் கோரப்படும். இதனைத் தொடர்ந்து மின்கட்டண திருத்தம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் வாரத்தில் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் – என்றுள்ளது.
இதேவேளை, ஜனவரி மாதம் மின்கட்டணம் குறைக்கப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று மின் பாவனையாளர் சங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)