தொழில்நுட்பம்
மைக்ரோசாப்ட் 365 சேவைகள் திடீர் முடக்கம்: காரணம் என்ன? பயனர்கள் அதிர்ச்சி!
மைக்ரோசாப்ட் 365 சேவைகள் திடீர் முடக்கம்: காரணம் என்ன? பயனர்கள் அதிர்ச்சி!
அவுட்லுக், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் பிற உற்பத்தித்திறன் பயன்பாடுகளுக்கு வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 365, கிளவுட் அடிப்படையிலான சந்தா சேவை தற்போது உலகம் முழுவதும் உள்ள பல பயனர்களுக்கு முடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Read In English: Outage over: Microsoft 365 web apps back online after almost 4 hoursஇது குறித்து ரெட்டோண்ட் (Redmond) தளமாகக் கொண்ட நிறுவனம் அதிகாரப்பூர்வ மைக்ரோசாஃப்ட் 365 ஸ்டேட்டஸ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சில பயனர்கள் இணையத்தில் மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகளை அணுக முடியாத ஒரு சிக்கல் எழுந்துள்ளது. மைக்ரோசாப்ட் தற்போது இந்த சிக்கலின் “மூலக் காரணத்தை” கண்டறிய ஆய்வு செய்து வருகிறது. எனவே சேவை மீண்டும் ஆன்லைனில் தொடங்குவதற்கு சிறிது நேரம் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் டவுன்டெடிகேட்டர் (Downdetector) கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான பயனர்கள் அவுட்லுக், ஒன்ட்ரைவ் மற்றும் பிற பயன்பாடுகள் அணுக முடியாத சிக்கல் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். “பீச் ஹில் ஸ்கூல்” என்று அழைக்கப்படும் ஒரு பயனர், “நாங்கள் சேவை பயன்படுத்துவதில் சிக்கலை சந்திக்கிறோம்” உங்கள் திறந்த கோப்புகள் அனைத்தும் சேமிக்கப்பட்டன. செயலிழப்பைத் தீர்க்க சிறிது நேரம் ஆகலாம் என்று ஒரு தவறான செய்தியைப் பெறுவதாகப் பதிவிட்டுள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மைக்ரோசாப்ட் சிக்கலை பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில், அதன் சேவை ஹெல்த் பக்கத்தில் அதன் சேவைகள் செயல் இழந்தது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. “எல்லாமே சரியாக இயங்குகிறது” என்று கூறுகிறது. சேவைகள் பயன்படுத்துவதில் வந்த சிக்கல், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்களுக்கு முன்பு தொடங்கியது, ஆனால் மைக்ரோசாப்ட் 365 வாடிக்கையாளர்கள் இணைய பயன்பாடுகளைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை ஆகலாம் ன்று கூறியுள்ளது.அதேபோல் சில நிமிடங்களுக்கு முன்பு, நிறுவனம் ஒரு தீர்வைப் பயன்படுத்தியதாகவும், இது சிக்கலைத் தீர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் சமீபத்தில் எக்ஸ் பக்கத்தில், அதன் கிளவுட் சந்தா சேவையைப் பாதிக்கும் சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், வேர்ட், எக்செல், டீம்ஸ் மற்றும் பிற உற்பத்தித்திறன் போன்ற மைக்ரோசாஃப்ட் 365 பயன்பாடுகள் சாதாரணமாக செயல்பட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளது.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“