இலங்கை
யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றாநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த நிலை எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோய்வியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அப்பகுதிகளில் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தற்போது சம்பந்தப்பட்ட காய்ச்சல் நோயாளிகளின் மாதிரிகளை எடுத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.