சினிமா
லக்கி பாஸ்கர் படத்தால் மாயமான 4 மாணவர்கள்.. தீவிர தேடலில் பொலிஸார்..! தொடரும் பரபரப்பு
லக்கி பாஸ்கர் படத்தால் மாயமான 4 மாணவர்கள்.. தீவிர தேடலில் பொலிஸார்..! தொடரும் பரபரப்பு
தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படங்களில் ஒன்றுதான் லக்கி பாஸ்கர். இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, பிரபல நடிகரான துல்கர் சல்மான் நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தார்.இந்த நிலையில், லக்கி பாஸ்கர் படத்தை பார்த்த நான்கு ஹாஸ்டல் மாணவர்கள் மாயமாகி உள்ளதாக தற்போது செய்திகள் பரபரப்பாக வெளியாகி உள்ளன. d_i_aஅதாவது ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் ஆண்டு படிக்கும் நான்கு மாணவர்கள் லக்கி பாஸ்கர் படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு அதில் கதாநாயகன் பணம், வீடு ஆகியவற்றை மிக எளிதிலையே சம்பாதித்தது போல நாங்களும் எளிதில் சம்பாதித்த பிறகு தான் மீண்டும் வருவோம் என்று ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடி உள்ளார்கள். தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.லக்கி பாஸ்கர் படத்தில் மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாஸ்கர், பேங்க் ஒன்றில் அக்கவுண்டராக வேலை செய்கின்றார். இதன் போது அவர் எதிர்நோக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனை, குடும்பத்தின் சுமை, கடன் நெருக்கடி போன்ற காரணங்களால் நேர்மை தவறும் ஒருவராக அவதாரம் எடுக்கின்றார்.இதை தொடர்ந்து பாஸ்கர் வாழ்க்கையில் நடைபெற்ற மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளிக்கின்றார் என்பதே இந்த படத்தியான் மீதிக் கதைக காணப்படுகின்றது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் 100 கோடியை கடந்திருந்தது.இந்த படம் வெளியானதில் இருந்து லக்கி பாஸ்கர் போல மாற வேண்டும், அதில் அவருக்கு நண்பராக வரும் ஆண்டனி போல் ஒருவர் நமது வாழ்க்கையில் வர வேண்டும் என்று தமது கருத்துக்களை இணையத்தில் பலரும் முன் வைத்து வருகின்றார்கள்.இவ்வாறான நிலையில், நான்கு ஹாஸ்டல் மாணவர்கள் பணம் சம்பதிக்க வேண்டும் என்ற ஆசையில் தப்பி ஓடி உள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பில் ஹாஸ்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் குறித்த நான்கு மாணவர்களையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.