இந்தியா

Pradeep John: அடுத்த 3 நாட்கள் மிக முக்கியம்.. இந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.. வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை!

Published

on

Pradeep John: அடுத்த 3 நாட்கள் மிக முக்கியம்.. இந்த இடங்களுக்கு செல்ல வேண்டாம்.. வெதர்மேன் விடுத்த எச்சரிக்கை!

Advertisement

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாகவும், இது இன்று மேற்கு – வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தகவலில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை தொடங்குகிறது என்றும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

டெல்டா பகுதியே முதலில் மழையை பெறும் என்றும் அதன்பிறகே மற்ற கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கணித்திருக்கிறார்.

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வட இலங்கை, மன்னார் வளைகுடா, தென் தமிழகம், கேரளா வழியாக நகரும். மன்னார் வளைகுடா வழியாக கேரளாவிற்கு செல்லும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தின் உள் பகுதிகள், மேற்கு தமிழகம் அனைத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று பிற்பகல் மழை தொடங்கும் என்று தெரிவித்துள்ள பிரதீப் ஜான், மாலை நேரத்துக்கு பிறகு மழை தீவிரம் அடையும் என்றும் சென்னையில் இன்றும், நாளையும் நல்ல மழை பெய்யும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சென்னை தவிர, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கும் கனமழைக்கு வாய்ப்புண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.

 வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் ஹாட்ஸ்பாட் டெல்டா பெல்ட் பகுதிகளே. டெல்டாவை சுற்றியுள்ள நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதை அடுத்த 3 நாட்களுக்கு தவிர்க்க வலியுறுத்தியுள்ள அவர், காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது தமிழகம், கேரளா வழியாக அரபிக்கடலுக்குச் செல்வதால் இந்த மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் தீவிர மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

Advertisement

இந்த தாக்கத்தால் இந்த மலைப்பகுதியை ஒட்டிய கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும், தென் தமிழகத்தில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் பெல்ட் போன்ற பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும், தூத்துக்குடி, நெல்லை, குமரி தென்பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version