வணிகம்

Sanjay Malhotra | ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர்..! யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

Published

on

Sanjay Malhotra | ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர்..! யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

சுமார் 6 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்படாது என்று தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து தான் ரிசர்வ் வங்கியின் 26ஆவது ஆளுநராக தற்போதைய வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர் சஞ்சய் மல்ஹோத்ரா. இவர் கான்பூர் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்து, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் படித்து முடித்தார்.

இந்திய குடிமையியல் பணியில் 33 வருட அனுபவம் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா, மின், நிதி, வரி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இவர், நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறைச் செயலாளராக பணியாற்றிவருகிறார்.

இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா புதன்கிழமை பொறுப்பேற்க இருக்கிறார். வரும் புதன்கிழமை முதல் 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பணியாற்ற இருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version