இலங்கை

ஜயவிமன, ரன்விமன வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!

Published

on

ஜயவிமன, ரன்விமன வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஜயவிமன ரன்விமன வீடுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனினால் அண்மையில் கையளிக்கப்பட்டது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச். முசம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வறியவர்களுக்கான உலர் உணவு போதிகள், சிபதொர புலமைப் பரிசில் கொடுப்பனவுகள், வீட்டுத் தோட்ட பயிர் கன்றுகள் என்பன அதிதிகளினால் வழங்கி வைத்தப்பட்டன.

Advertisement

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு, உதவி பிரதேச செயலக எம்.ஏ.சி. ரமீசா, தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம். பசீர், முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல்.ஏ.மஜீத், வங்கி முகாமையாளர் எஸ்.ரவி, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version