இலங்கை

யாழ்ப்பாணத்தில் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Published

on

யாழ்ப்பாணத்தில் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணத்தில் தற்போது பரவிவரும் ஒரு வகையான மர்ம காய்ச்சலால் இதுவரை 32 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (12-12-2024) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஒரு வகையான நோய் நிலைமை காரணமாக, யாழ்ப்பாணத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சிலவற்றின் மூலம் எலிக்காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தப்ரேரா தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனையடுத்து, தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக்காய்ச்சல் என கருதி, அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்களுக்கு எலிக்காய்ச்சல் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version