இலங்கை
இலங்கையில் ரீல்ஸ் மோகத்தால் இளம் சீன பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
இலங்கையில் ரீல்ஸ் மோகத்தால் இளம் சீன பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
இலங்கையில் ரயிலில் ரீல்ஸ் வீடியோ எடுக்கும்போது சீன பெண் ஒருவர் கீழே விழுந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீனாவை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது, ரயிலில் பயணிக்கும்போது அப்பெண் ரயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்துள்ளார்.
இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.