இலங்கை

கோடாரியால் தாக்கி மச்சானை கொலை செய்த நபர் கைது!

Published

on

கோடாரியால் தாக்கி மச்சானை கொலை செய்த நபர் கைது!

குடும்பத் தகராற்றில் சகோதரியின் கணவரை கோடாரி மற்றும் கூரிய ஆயதங்களால் தாக்கி கொலை செய்ய சம்பமொன்று  மட்டக்களப்பு எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனையில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெற்றுள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

 சம்பவ தினமான நேற்று இரவு 11.00 மணியளவில் உயிரிழந்தவர் தனது மனைவியின் சகோதரருடன் மது அருந்தி விட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அது தகராறாக மாறி இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த கொலை தொடர்பில் கணவன் மனைவி இருவரை கைது செய்துள்ளதாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவம் தொடர்பாக தடவியல் பிரிவு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version