இலங்கை
ஜனாதிபதி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்: பிரதமர் மோடியுடன் திங்கள் சந்திப்பு!
ஜனாதிபதி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்: பிரதமர் மோடியுடன் திங்கள் சந்திப்பு!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான குழு ஈடுபடும்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களின் பின்னரான இந்த விஜயம், தெளிவான மக்கள் ஆணையை முன்னிறுத்தியுள்ளதால், இலங்கை இந்திய உறவுகளின் எதிர்கால நலன்களில் முக்கியத்துவம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.