இலங்கை
தனது பதவியை இராஜினாம செய்தார் சபாநாயயகர்
தனது பதவியை இராஜினாம செய்தார் சபாநாயயகர்
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக இன்று (13.12.2024) ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.
சபாநாயகர் தான் கலாநிதி பட்டம் பெற்றதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய காரணத்தாலேயே இந்த நம்பிக்கையில்லா பிரேணை கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றசூழ்நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.