சினிமா
தம்பியின் படத்தை பகிர்ந்த செல்வராகவன்…! மாலை வெளியாகவுள்ள அதிரடி அப்டேட்..!
தம்பியின் படத்தை பகிர்ந்த செல்வராகவன்…! மாலை வெளியாகவுள்ள அதிரடி அப்டேட்..!
பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு நாளை மாலை 6 மணிக்கு அப்டேட் வெளியாகும் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகரின் புகைப்படத்தினை பதிவிட்டு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வலம் வருகிறது. . இயக்குநர் செல்வராகவன் தான் இயக்கும் அடுத்த படைத்திற்கான அறிவிப்பாக நடிகர் தனுஷின் புகைப்படத்தினை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இன்று மாலை 6 மணிக்கு நடிகர் தனுஷ்ஷினால் செல்வராகவனின் அடுத்த திரைப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்துள்ளார். இவர்கள் இணையும் 3வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மாலை வெளியாக இருக்கும் பெஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் ஹீரோ, ஹீரோயின் தொடர்பான அப்டேட் இருக்க வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.