நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 13/12/2024 | Edited on 13/12/2024

தங்கலான் படத்திற்கு பிறகு ‘வீர தீர சூரன் பாகம் 2’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். எஸ்.யு. அருண்குமார் இயக்கி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த துருவ நட்சத்திரம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில் விக்ரம் அடுத்ததாக மண்டேலா, மாவீரன் பட இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவரிடம் கதை கேட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படம் விக்ரமின் 63வது படமாக உருவாகிறது. இப்படத்தை ஷாந்தி டாக்கிஸ் சார்பாக அருண் விஷ்வா தயாரிக்கிறார். இதனை விக்ரம் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

Advertisement

மேலும் மடோன் அஷ்வின், அருண் விஷ்வா ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “இவர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி. இந்த காம்போ நெருப்பு மாதிரி இருக்கிறது. மகிழ்ச்சியான கூட்டணியை எதிர்நோக்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மடோன் அஷ்வின் மண்டேலா படத்திற்காக தேசிய விருது வாங்கியிருந்தார். அதே போல் விக்ரமும் பிதாமகன் படத்திற்காக தேசிய விருது வாங்கியிருந்தார். இதனால் இரண்டு பேரும் கூட்டணி வைத்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


<!–
–>

<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

–>

Advertisement