வணிகம்

தொடர்ந்து ஒரே நிலையில் நீடிக்கும் தங்கத்தின் விலை..!! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா ?

Published

on

தொடர்ந்து ஒரே நிலையில் நீடிக்கும் தங்கத்தின் விலை..!! ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா ?

தங்கத்தின் விலை நிலவரம்

Advertisement

தங்கம் பொதுவாகவே வெளிநாடுகளில்வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது இதனால் சர்வதேச சந்தை நிலவரம் படி தங்கத்தின் விலை தினமுமே ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படும். இதனை அடுத்து கடந்த சில நாட்களாகவே சர்வதேச சந்தை நிலவரத்தின்படி தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் இன்றைய (டிசம்பர் 12) தங்கத்தின் நிலவரம் பற்றி தெரிந்து கொள்வோம்.

அதன்படி நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7285 ரூபாய்க்கும் சவரனுக்கு ரூ. 58,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்றும் எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையான ரூ.7285 க்கும், ஒரு சவரன் 58,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் நேற்று 18 காரட் தங்கம் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.6015 க்கும், சவரன் ரூ.48,120 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி அதே விலையான ஒரு கிராம் ரூ. 6015க்கும், ஒரு சவரன் ரூ.48,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை நிலவரம் பொறுத்த வரையிலும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.104க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.10,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version