இலங்கை

பஸ் சக்கரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு

Published

on

பஸ் சக்கரத்தில் சிக்குண்டு பெண் உயிரிழப்பு

பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று 12) இரவு எல்பிட்டிய – பிடிகல வீதியில் தலகஸ்பே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

உயிரிழந்தவர் கலகஸ்பே பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் ஆவார்.

எல்பிட்டியவில் இருந்து பிடிகல நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கி விட்டு வலது பக்கமாக திரும்ப முயன்ற போது, வீதியில் பயணித் பெண் பஸ்ஸின் பின்புறத்தில் உள்ள சக்கரமொன்றில் சிக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version